பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: விவசாயக் கருத்தரங்கில் வலியுறுத்தல்

கடலூர் மாவட்ட தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில், 'கருகும் பயிர்கள், கண்ணீரில் விவசாயிகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கடலூர் நேருபவனில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கடலூர் மாவட்ட தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில், 'கருகும் பயிர்கள், கண்ணீரில் விவசாயிகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கடலூர் நேருபவனில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலர் கா.மஞ்சுமுருகவேல், ஒருங்கிணைப்பாளர் பார்.ஜெயச்சந்திரன், மக்கள் தொடர்புச் செயலர் பெ.உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் பெருமாள் ஏரி நீர்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தானூர் ஆர்.சண்முகம், சாகும் விவசாயம் - சாகடிக்கப்படும் விவசாயிகள் என்ற தலைப்பில் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் பெ.ரவீந்திரன், நமது நாடு என்ற தலைப்பில் மதுவில் சிக்கியவர்களை மீட்கும் இயக்கம் வேல்தொண்டைமான், நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநர் பெ.ஹரிதாஸ், வரும் தலைமுறைக்கு விவசாயம் என்ற தலைப்பில் சங்க துணைத் தலைவர் ந.ரவி, இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் சேத்தியாத்தோப்பு பாசன அணைக்கட்டு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் கே.விஜயகுமார் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில் விவசாயப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் வகையில் மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தல், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வசதி ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, எரிமலை எப்படி பொறுக்கும் என்ற தலைப்பிலான கவியரங்கம் சங்கப் பொருளர் சா.ராசதுரை தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக சங்க மாவட்டத் தலைவர் தி.ராசமச்சேந்திரசோழன் வரவேற்க, துணைத் தலைவர் சுபாஅருணாசலம் நன்றி கூறினார். துணைத் தலைவர் கவிமனோ அரங்க ஆளுகையில் ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com