எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கையுந்துப் பந்து போட்டி: அமைச்சர் தொடக்கி வைத்தார்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம், மாநில அளவிலான கையுந்துப் பந்து (வாலிபால்) போட்டிகளை அமைச்சர்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம், மாநில அளவிலான கையுந்துப் பந்து (வாலிபால்) போட்டிகளை அமைச்சர்
 எம்.சி.சம்பத் கடலூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
 கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. அண்ணா விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை மாலை தொடக்கி வைத்தார்.
 இதில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் தனித் தனியாக நடைபெறுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் லீக் முறையில் நடைபெறுவதை முன்னிட்டு, மாநில அளவில் சிறந்த 4 அணிகள் அழைக்கப்பட்டு அழைப்பு போட்டியாக நடைபெறுகிறது.
 முன்னதாக கடலூர் இசைப் பள்ளி சார்பாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா, அதிமுக நிர்வாகிகள் ஆர்.குமரன், ஜி.ஜெ.குமார், பெருமாள்ராஜா, ராம.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com