நேர்காணல்: ஓய்வூதியர்களுக்கு அழைப்பு

கடலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் கருவூலங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் கருவூலங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
 இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை கருவூலத்துக்கு நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். நேர்காணலுக்குச் செல்லாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும்.
 எனவே, இதுவரை நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெறும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்-கருவூலத்துக்கு நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்திருப்பின் அவர்களின் வாரிசுதாரர்கள் கருவூலத்துக்கு இறப்புச் சான்றுடன் வந்து தெரியப்படுத்த வேண்டும்.
 இறந்த ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள தொகையை ஏடிஎம் மூலம் பெறுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு ஓய்வூதியர் இறப்புக்குப் பின்னர் பணம் எடுக்கப்பட்டிருந்தால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஓய்வூதியர்களின் வாரிசுதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com