பிளஸ்-1மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம்: மாணவர்கள் குழப்பம்

பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் மாதிரி இதுவரை வெளியிடாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் மாதிரி இதுவரை வெளியிடாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் கல்வித் துறை பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தற்போது, 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. காலாண்டுத் தேர்வு அடுத்த மாதம் (செப்.) 2-ஆம் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த சூழலில், பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாதிரி வெளியிடப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேநிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக முன்னாள் மாநில பொதுச் செயலர் ஜெ.பாலச்சந்தர் கூறியதாவது: இந்த ஆண்டில் தமிழக கல்வித் துறை பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் கடந்தும் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாதிரி வெளியிடப்படவில்லை. இதனால், வினாத்தாள் மாதிரி எப்படி இருக்கும், மதிப்பெண்கள் அடிப்படையில் எத்தனை கேள்விகள் கேட்கப்படும் உள்ளிட்ட நடைமுறை ஏதும் தெரியாததால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்ட தமிழக அரசின் கல்வித் துறை, பிளஸ்-1 வகுப்புக்கான ஆண்டு மாதிரி வினாத்தாளையும் உடனடியாக வெளியிட ஆவண செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com