மணிமுக்தாற்றை தூய்மைப்படுத்தத் திட்டம்

விருத்தாசலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மணிமுக்தாற்றை தூய்மைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

விருத்தாசலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மணிமுக்தாற்றை தூய்மைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.
 கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலம் வழியாகப் பாயும் மணிமுக்தாறு மூலம் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தியாகிறது. எனினும் நகருக்குள் இந்த ஆறு மிகவும் மாசுபட்ட நிலையில் உள்ளதால், ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இந்த நிலையில், மணிமுக்தாற்றை தூய்மைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில் ஆற்றை தூய்மைப்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
 அதன்படி விரைவில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது.
 கூட்டத்தில் என்எல்சி அலுவலர்கள் மோகன், பீட்டர்ஜேம்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் ரெ.பிரகாஷ்ராஜா, செயலர் அ.அன்புகுமரன், பொருளாளர் டி.சந்திரபிரகாஷ், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் சை.அபுல்கலாம் ஆசாத், சி.காமராஜ், அதிமுக நிர்வாகிகள் பச்சமுத்து, கே.விஜயகுமார், ஆர்.ராஜசேகர், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கூட்டத்தையொட்டி மணிமுக்தாற்றை எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com