விவசாயிகளுக்கு ஆதரவாக 16-இல் ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என விருத்தாசலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில்(படம்) முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என விருத்தாசலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில்(படம்) முடிவு செய்யப்பட்டது.
 கடலூர் மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர் சி.வெ.கணேசன் எம்எம்ஏ தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் அ.கருப்புசாமி, தி.க. மாணவரணி மாநில நிர்வாகி த.சீ.இளந்திரையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி.ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் ஷேக்தாவூத், காமராஜர் பெருந்தலைவர் மக்கள் கட்சி குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கை கண்டித்தும் திமுக தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் வரும் 16-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளின் தேசிய, கூட்டுறவு வங்கிக் கடன்களையும் ரத்து செய்யக்கோரி புதுதில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை கண்டுக்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் பாவாடைகோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபானி, நிர்வாகிகள் அரங்க பாலகிருஷ்ணன், கருப்புசாமி, பாண்டுரெங்கன், வி.சி.க. தொகுதிச் செயலர் ஐயாயிரம், நகரச் செயலர் மணிமாறன், ம.ம.க. நிர்வாகி ஜாகீர் ஹூசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com