அரசு மணல் குவாரியில் முன்னாள் எம்எல்ஏ ஆய்வு

காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூரில் உள்ள அரசு மணல் குவாரியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள்

காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூரில் உள்ள அரசு மணல் குவாரியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இந்த குவாரியில் முறைகேடு நடைபெறுவதாக வந்த புகார்களின் பேரில், கே.பாலகிருஷ்ணன் அப்பகுதி மக்களுடன் குவாரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் மணல் எடுத்துள்ளனர். குவாரிக்கு வரும் லாரி ஓட்டுநர்களிடம் ஆளும் கட்சியினர் ரூ.500 பணம் வசூலித்துக்கொண்டு உள்ளே அனுமதிக்கின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் லாரி ஓட்டுநர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். முறைகேடாக மணல் அள்ளுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீரில் உப்பு நீர் கலந்து வருகிறது.
அனுமதித்த நேரத்தைவிட இரவு, பகலாக மணல் குவாரி இயங்கி வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். வருகிற ஆக.16-ஆம் தேதிக்குள் அனைத்தும் சரி செய்யப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள், காவல் துறையினர் கூறியுள்ளனர். அவ்வாறு சரிசெய்யவில்லை எனில், அன்றைய தினமே இப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து குவாரியை மூடுவதற்கான தொடர் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com