எம்ஜிஆர் திரைப்படங்களைத் திரையிடமின்னணு கள விளம்பர வாகனங்கள் வருகை

எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களை கிராமங்களில் திரையிட அதிநவீன மின்னணு கள விளம்பர வாகனங்கள் கடலூர் வந்துள்ளன.தமிழக முன்னாள் முதல்வர்

எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களை கிராமங்களில் திரையிட அதிநவீன மின்னணு கள விளம்பர வாகனங்கள் கடலூர் வந்துள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களை திரையிட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் அதிநவீன மின்னணு களவிளம்பர வாகனம் மூலமாக திரைப்படங்களை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விழுப்புரம், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிநவீன மின்னணு விடியோ வாகனங்கள் கடலூருக்கு வரவழைக்கப்பட்டன.
இந்த வாகனங்களின் பிரசாரப் பயணத்தை கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலையில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம், வருகிற 15-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட பாடல்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் திரையிடுவார்கள்.
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) த.வடிவேல், கடலூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் ஜெ.குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ரவிச்சந்திரன், அதிமுக நிர்வாகிகள் ராம பழனிச்சாமி, பெருமாள்ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.வி.மணி, தமிழ்ச்செல்வம், நிர்வாகி ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com