கடலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஐஜி ஆய்வு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூரில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சி.ஸ்ரீதர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூரில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சி.ஸ்ரீதர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவர் வெ.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சி.ஸ்ரீதர் விழா நடைபெறும் மைதானம், விழா மேடை, வாகனங்கள் நிறுத்துமிடம், முக்கியப் பிரமுகர்கள் அமரும் இடம், அவர்கள் தங்குமிடம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு செய்தார். அப்போது மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com