புத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்

குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை செடல் திருவிழா நடைபெற்றது. அன்று இரவு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சனிக்கிழமை திருத்தேர் திருவிழா நடைபெற்றது. காலை 8 மணியளவில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு தேர் புறப்பாடு நடைபெற்றது. மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதனையடுத்த திரளான பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 3 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com