வேளாண் மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி

ஆயிப்பேட்டை கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.

ஆயிப்பேட்டை கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
சிதம்பரம் அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி, அக்கிராமத்தில் வேளாண் மாணவிகளின் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சியை உதவிப் பேராசிரியர் ராஜாமோகன் தொடக்கி வைத்தார். கண்காட்சியில் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர். பயிர்களை தாக்கும் நோய்கள் குறித்து பேராசிரியர் ராஜாமோகன் விளக்கமளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை வேளாண் மாணவிகள் இணைந்து நடத்தினர். பேரணியை தலைமை ஆசிரியர் தேவதாஸ் தொடக்கி வைத்தார். துணைப் பேராசிரியர் காளிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கிராமத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேளாண்புல மாணவிகள் வெட்டி அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com