படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித் தொகை

படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற உரிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற உரிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
 இதுகுறித்து முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போர் விதவையர், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள், இளநிலை படை அலுவலர் வரை உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிதி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்து. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
 விண்ணப்பத்தை நிறைவு செய்து கல்விக் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், படைவிலகல் சான்று மற்றும் கல்லூரி கல்வியெனில் முந்தைய ஆண்டின் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகலினை இணைத்து நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கடலூரிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com