வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்புக் காவலில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
 கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, சிறுபாக்கம், பெண்ணாடம், நெய்வேலி ஆகிய காவல் நிலைய பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து தனிப் படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினர் அண்மையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக, வேப்பூர் அரியநாச்சியை சேர்ந்த கணேசன் மகன் சங்கர் (எ) ஆனி சங்கர் (28) தலைமையில் செயல்பட்டு வந்த 10 பேர் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
 இதில், ஆனி சங்கர் மீது ராமநத்தம், வேப்பூர், சிறுபாக்கம், ஆவினங்குடி, திட்டகுடி, பெண்ணாடம், விருத்தாசலம், நெல்லிகுப்பம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளும், மேலும் பல மாவட்டங்களிலும் இவர் மீது வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார்.
 இந்தப் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை அதற்கான உத்தரவை வெளியிட்டார். இதையடுத்து, ஆனிசங்கர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com