கத்திரிச் செடிகளில் நோய்த் தாக்குதல் விவசாயிகள் வேதனை

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரி செடிகளில் காய்ப்புழு தாக்குதல் அதிகளவில் தென்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரி செடிகளில் காய்ப்புழு தாக்குதல் அதிகளவில் தென்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட குறிஞ்சிப்பாடி, அயன்குறிஞ்சிப்பாடி, ஆபத்தாரணபுரம், கண்ணாடி, மீனாட்சிப்பேட்டை, ஆடூர் அகரம், வெங்கடாம்பேட்டை, கீழூர் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தற்போது கத்திரி சாகுபடி செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் "பரோல்' என்கிற வீரிய ரக கத்திரியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது காய்க்கும் பருவத்தில் உள்ள கத்திரி செடிகளில், காய்ப் புழு, இலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடை செய்யப்படும் கத்திரிக் காய்களில் பெரும்பாலானவை
 சொத்தையாக உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
 இதுகுறித்து கீழூரைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அரை ஏக்கர் நிலத்தில் வீரிய ரகக் கத்திரிக் கன்றுகளை நடவு செய்துள்ளேன். கன்று ஒன்று ஒரு ரூபாய் விலைக்கு பண்ணையில் வாங்கி நடவு செய்தேன். தற்போது, செடிகள் காய்க்கும் பருவத்தில் இலை நோய் தாக்குதலும், காய்ப் புழு தாக்குதலும் அதிகமாக உள்ளது. 10 நாள்களுக்கு ஒரு முறை ரூ.2,500 வரை செலவு செய்து மருந்து அடித்தாலும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
 அறுவடை செய்யப்படும் காய்களில் பாதிக்கும் மேல் நோய் பாதிக்கப்பட்டவையாக இருப்பதால் கீழே கொட்டி வருகிறோம். எதிர்பார்த்த அளவு விலையும் கிடைக்கவில்லை. கிலோ ரூ.8 வீதம் வியாபாரிகள் வாங்கி சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். செய்த செலவை திரும்ப எடுப்பதே கடினமாக உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனையும் கிடைக்கவில்லை என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com