காவல் ஆய்வாளர் மீது இந்திய கம்யூ. புகார்

பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் மீது புகார் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.

பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் மீது புகார் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.
 புவனகிரி வட்டம், கரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சி.ராமலிங்கம். இவர் அண்மையில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், கே.பஞ்சங்குப்பத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து சுமார் 1,500 ஏக்கர் நிலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. அப்போது அவர்கள் நிலத்துக்கு குறைவான தொகையை வழங்கியதை அடுத்து, நிலம் கொடுத்தோர் நலச் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் பயனாக குறைவான மதிப்பில் நிலம் விற்றவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. ஆனால், 50 விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இந்தப் பணத்தை வழங்காமல், சங்கத்தின் தலைவர் ச.சண்முகம், துணைச் செயலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான எம்.சேகர், செயலர் க.பரமானந்தன் ஆகியோர் கையாடல் செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் செவ்வாய்க்கிழமை பரங்கிப்பேட்டை காவல் துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், ஒன்றியச் செயலர் எஸ்.சண்முகம், நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர். அதில், பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் ஏற்கெனவே எங்கள் கட்சியினருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதுதொடர்பாகவும், தனியார் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் மீதும் கட்சி சார்பில் கடந்த 1-ஆம் தேதி ஆட்சியர், எஸ்பியிடம் புகார் அளித்துள்ளோம். இதனால், ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர், 9 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகளை பொய்யாகக் காரணம் காட்டி, ஜோடிப்பான முறையில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். எனவே, காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com