பண்ருட்டியில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 பண்ருட்டி வ.உ.சி. தெருவில் அமைந்துள்ள இடம்புரி விநாயகர், பெரியாண்டவர், அவையாம்பாளையம் தெருவில் அமைந்துள்ள காமன், சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள கருமாரி அம்மன், அய்யனார் கோயில் தெருவில் அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத அய்யனார் கோயில் ஆகிய கோயில்களில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன.
 இதையடுத்து, வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் 5 கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக, அய்யனார் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் கடந்த 5-ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. சிவாச்சாரியார்கள் பலர் பங்கேற்று வேத மந்திரங்கள் முழங்கி யாகசாலை பூஜைகளை செய்தனர். வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நான்காம் கால யாக பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. 7.30 மணிக்கு இடம் புரி விநாயகருக்கும், 7.50 மணிக்கு காமனுக்கும், 8.10 மணிக்கு பெரியாண்டவருக்கும், 8.30 மணிக்கு கருமாரி அம்மனுக்கும், 9 மணிக்கு அய்யனார் அப்பனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் ப.பன்னீர்செல்வம், சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் 29, 30, 31 வார்டு நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.
 விழாவில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com