சிஐடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வலியுறுத்தி கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வலியுறுத்தி கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பொது விநியோகத் திட்டத்திலிருந்து மண்ணெண்ணெய், சர்க்கரையை நீக்கக் கூடாது. பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும்.
 நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தை 200 நாள்களாக்கி ரூ.300 கூலி வழங்குவதோடு, பேரூராட்சிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீடு, முறைசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 15 அடிப்படை சட்டங்களை ஒரே சட்ட தொகுப்பாக சுருக்கிடும் முறையை கைவிட வேண்டும். அனைவருக்கும் கண்ணியமான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் கடலூரில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.வேல்முருகன், டி.பழனிவேல், வி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஜீவானந்தம், ஜி.குப்புசாமி, கே.சாவித்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com