ஆற்றுப் பாலத்தைத் தூய்மைப்படுத்திய இளைஞர்கள் குழு

கடலூரில் இளைஞர்கள் குழுவினர் ஆற்றுப் பாலத்தை ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினர்.

கடலூரில் இளைஞர்கள் குழுவினர் ஆற்றுப் பாலத்தை ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினர்.
 கடலூர் - புதுச்சேரி சாலையில் ஆல்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றுப் பாலம் உள்ளது. இது சென்னை செல்வதற்கான மிக முக்கிய பாலமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாலத்தைக் கடந்துச் செல்கின்றன.
 நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தப் பாலத்தின் இருபுறமும் மணல் தேங்கி, புல் பூண்டுகள் வளர்ந்திருந்தன. இதனால், மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டிருந்தன.
 அண்மையில் கடலூரில் பெய்த சிறிய அளவிலான மழைக்கே நீர் ஆற்றுக்குள் வடிய முடியாமல் பாலத்திலேயே தேங்கி நின்றது.
 இதுகுறித்து "கடலூர் சிறகுகள்' என்ற அமைப்பு முகநூலில் பதிவு வெளியிட்டிருந்தது. ஆனாலும் நகராட்சியோ, நெடுஞ்சாலைத் துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இதைத் தொடர்ந்து இளைஞர்கள் சிலருடன் "கடலூர் சிறகுகள்' குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பாலத்தைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
 பாலம் முழுவதும் இருபுறங்களிலும் தேங்கியிருந்த மணலை அகற்றி, புல் பூண்டுகளையும் அப்புறப்படுத்தினர்.
 இளைஞர்களின் இந்தச் செயலை அந்தப் பகுதியைக் கடந்துசென்றவர்கள் பெரிதும் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com