என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை: காலவறையற்ற வேலைநிறுத்தம்: ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற காலதாமதம் ஆனால்,

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற காலதாமதம் ஆனால், ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் ஒன்றிணைத்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய நேரிடம் என எச்சரித்துள்ளது.
 என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டம், வட்டம் 24-இல் உள்ள ஏஐடியுசி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அந்தச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.வைத்தியலிங்கம் தலைமை வகித்தார். துணைச் செயலர் எஸ்.செüந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
 பொதுச் செயலர் கே.வெங்கடேசன் என்.எல்.சி.இல் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து விளக்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.சுப்பையா, எஸ்.குணசேகரன், எஸ்.கோவிந்தராசு, பி.மாயவன், ஏ.ரவீந்திரன், எம்.கிருஷ்ணகுமார், எஸ்.உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் போராட்டம் நடத்தி வரும் சுரங்கம் 1-ஏ ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு என்.எல்.சி. நிர்வாகம் தீர்வு காண முன் வராதது கண்டனத்துக் குறியது, தொழிலாளர் பிரச்னையில் நிர்வாகம் காலதாமதப்படுத்துமானால், ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அனைத்துப் பகுதி தொழிலாளர்களின் பொது கோரிக்கைகளையும் ஒன்றிணைத்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய நேரிடும்.
 இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் ஜூலை 28-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி நடைபெறும் பேரணியில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com