சிதம்பரம் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

சிதம்பரம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாகப் பள்ளிகளில் கொண்டாடப்பட்டன.

சிதம்பரம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாகப் பள்ளிகளில் கொண்டாடப்பட்டன.
 ஷெம்போர்டு பள்ளி: சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வர் டி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலர் ஏ.அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்துப் பேசினார். ஆசிரியை சுபா வரவேற்றார்.
 விழாவில் ஆசிரியை செந்தில் "கல்வி வளர்ச்சியில் காமராஜர் பங்கு' என்ற தலைப்பிலும், ஆசிரியை ரம்யா "கல்வி வளர்ச்சி காமராஜருக்கு முன்பும் பின்பும்' என்ற தலைப்பிலும், ஆசிரியை வாணி "கல்வி திட்டமும், காமராஜரும்' என்ற தலைப்பிலும் பேசினர்.
 விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் டி.ராஜமாணிக்கம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
 ராணி சீதை பள்ளி: சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், கல்வி வளர்ச்சி நாள் விழாவும் நடைபெற்றன.
 தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஆசிர்ரவிச்சந்திரன் அறிமுக உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். எஸ்.ஜோல்பின் தேவகிருபை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பி.சவிதா நன்றி கூறினார்.
 பு.மடுவங்கரை தொடக்கப்பள்ளி: சிதம்பரம் அருகே பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நா.இளங்கோ தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.நடராஜன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் க.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், தலைமை ஆசிரியை ஆர்.ஈஸ்வரி வரவேற்றார். 2016-17 ஆண்டின் மாவட்டத்தின் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான காமராஜர் விருது மற்றும் சான்றிதழ், ரூ. 10 நிதிக்கான காசோலை ஆகியவற்றை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நா.இளங்கோ தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்.
 உதவி ஆசிரியை எஸ்.சரண்யா நன்றி கூறினார். விழாவை உதவி ஆசிரியை லட்சுமிபாரதி தொகுத்து வழங்கினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் சுந்தரராஜன், ஆசிரியர் பயிற்றுநர் டி.நெப்போலியன், அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 குருஞானசம்பந்தர் பள்ளி: சிதம்பரம் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் முதல்வர் ஏ.பட்டாபிராமன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். மூத்த ஆசிரியை சி.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com