நீட் தகுதித் தேர்வுக்கு விலக்குக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதங்கள் அனுப்பும் போராட்டம்

நீட் தகுதித் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதங்கள் அனுப்பும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீட் தகுதித் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதங்கள் அனுப்பும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நீட் தகுதித் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், ஒரு கோடி கடிதங்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் குவிய வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கை வெளியிட்டார்.
 இதைத் தொடர்ந்து, வடக்குத்து முன்னாள் ஊராட்சித் தலைவர் கோ.ஜெகன் தலைமையில், திராவிடர் கழகப் பொதுச் செயலர் துரை.சந்திரரன் முன்னிலையில், இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களிடம் அஞ்சல் அட்டைகளில் கையெப்பம் பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 இந்த நிகழ்வில், திராவிடர் கழக மண்டல இளைஞரணிச் செயலர் வி.திராவிடன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.ராமநாதன்,நகர்ப்பகுதித் தலைவர் ஆர்.கண்ணன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com