மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: கடலூரில் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கடலூர் துறைமுகத்திலுள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.வைத்திலிங்கம் தலைமை வகித்தார். எஸ்.அரசப்பன், பி.அல்லிமுத்து, வி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆர்ப்பாட்டத்தில், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல், மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்குதல், நாட்டுப் படகு மீனவர்கள் 3 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்தல், பெரிய நிறுவனங்களில் மட்டும் வலை, படகு உள்ளிட்ட பொருள்களை வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்வதை கண்டிப்பது, தொழில் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குதல், கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்துதல், இலங்கை அரசின் கடுமையான சட்டத்தை நீக்க தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாநிலச் செயலர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஜி.கந்தன், வி.சுப்புராயன், ஏ.பாபு, கே.சுப்புராயன், ஜி.சுந்தரமூர்த்தி, வி.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்து கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com