என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தடை

நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால்,

நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 இதுகுறித்து என்எல்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 நெய்வேலி, சுரங்கம் 1ஏ-இல் ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சில ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதத்துக்கு 26 நாள்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர்.
 தடையாணை: ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி என்எல்சி இந்தியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் ஜூலை 24 -ஆம் தேதி வழங்கிய தடை ஆணையில் (டபிள்யூ.பி.எண்.18769/2017 மற்றும் டபிள்யூஎம்பி எண்.20292/2017) என்எல்சி இந்தியா நிறுவன தொழிலகங்களுக்கு உள்ளோ, வாயில் பகுதியிலோ, தலைமை அலுவலகத்திலோ, நிறுவன வளாகப் பகுதிகளிலோ, ஆர்ப்பாட்டமோ, சட்டத்துக்கு விரோதமான வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களிலோ, தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தொழிலாளர்கள் ஈடுபடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 எனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுரங்கம்-1ஏ ஒப்பந்தத் தொழிலாளர்கள் உடனடியாக பணிகளுக்குத் திரும்புமாறு என்எல்சி இந்தியா நிறுவனம் வேண்டுகோள் விடுப்பதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com