100 பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க திட்டம்

கடலூர் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
 தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப் படை சார்பில், தாவரக் கழிவு மூலம் உரம் தயாரிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆரோவில் தாவரவியல் பூங்காவின் சுற்றுச்சூழல் கல்வி ஆசிரியர் ந.சத்தியமூர்த்தி மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் 20 பேருக்கு பயிற்சியளித்தார்.
 பயிற்சியின் முடிவில் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் தாவரக் கழிவு மூலம் உரம் தயாரிப்புப் பணி நடைபெற்றது. இதில் அலுவலக வளாகத்திலுள்ள தாவரக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றினை உரமாக மாற்றும் பணி நடைபெற்றது.
 இதுகுறித்து கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் த.எபனேசர் கூறுகையில், நிகழ் கல்வியாண்டில் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 20 பள்ளிகளிலிருந்து தலா 20 மாணவர்கள், ஒரு ஆசிரியர் வீதம் ஆரோவில் தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 இப்பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளியில் மரக்கன்று நடுதல், காய்கறித் தோட்டம் அமைத்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை பசுமைச் சூழல் நிறைந்ததாக மாற்றும் பணியிலும் ஈடுபட உள்ளோம் என்றார்.
 தேசிய பசுமைப் படையின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.செல்வநாதன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தனசேகரன், வேளாண் ஆசிரியர் அழகேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com