கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: காலியிடங்களுக்கு நாளை மாணவர் சேர்க்கை

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நிலுவையில் உள்ள காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) நடைபெற உள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நிலுவையில் உள்ள காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) நடைபெற உள்ளது.
 வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியை அளிக்கும் வகையில் மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் பள்ளியைத் தவிர மற்ற தனியார் பள்ளிகள் தங்களது மொத்த எல்கேஜி சேர்க்கையில் 25 சதவீத இடத்தை நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடாக வழங்க வேண்டும். இதற்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடும்.
 இதன்படி கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 375 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 5,226 இடங்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவுற்ற பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன. இதற்காக 7,232 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் சில பள்ளிகளில் அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.
 இதன்படி 2,922 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 1,812 பேர் இந்தச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். மீதம் 3,416 இடங்கள் நிரப்பப்படவில்லை.
 இந்த நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேர்க்கைக்கான தெரிவு செய்யும் பணி கடந்த 31-ஆம் தேதி குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருசிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால் நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வரும் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
 எனவே, ஏற்கெனவே இணையவழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com