தில்லை திருமுறை மன்றக் கூட்டம்

சிதம்பரம் தில்லைத் திருமுறை மன்ற வருடாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் தில்லைத் திருமுறை மன்ற வருடாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு பேராசிரியர் டி.சுவாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுறை மன்றம் சார்பில் தினமும் நடைபெற்று வந்த திருமுறை முற்றோதல், விளக்கம் என்ற நிகழ்ச்சிக்கு, கோயில் பொதுதீட்சிதர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் கட்டணம் விதித்தது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் ஜே.ராகவன், டி.பொன்னம்பலம், டி.சிவராமன், வி.கே.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 தீர்மானங்கள்: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லையில் தினமும் திருமுறை நிகழ்ச்சி நடைபெற அனுமதி அளித்த பொது தீட்சிதர்களுக்கு நன்றி தெரிவிப்பது, கட்டணம் இல்லாமல் பழைய முறைப்படி திருமுறை நிகழ்ச்சி நடத்த பொதுதீட்சிதர்கள் அனுமதி அளிக்க வேண்டும், இல்லையெனில் ஆனித் திருமஞ்சன திருவிழா முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ அன்பர்களை திரட்டி நடவடிக்கை மேற்கொள்வது, திருமுறை நிகழ்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்த பொது தீட்சிதர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com