வீரசேவை புரிந்தவர்களுக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு

வீரசேவை புரிந்தவர்கள் மத்திய அரசு வழங்கும் விருதைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.

வீரசேவை புரிந்தவர்கள் மத்திய அரசு வழங்கும் விருதைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் உள்துறை சார்பில், தைரியமான, மனிதாபிமானம் மிக்க பணிகளைச் செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு ஆண்டுதோறும் சர்வோத்தம் ஜீவன் ரக்ஷô பதக், உத்தம் ஜீவன் ரக்ஷô பதக், ஜீவன் ரக்ஷô பதக் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் உடைய இத்தகைய வீர சேவை புரிந்தவர்களைக் கெüரவிக்கும் விதத்திலும், இவர்களைப்போல மற்றவர்களும் ஆபத்துக் காலத்தில் உதவிகள் புரிவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 விருதைப் பெறுவதற்கு 1.10.2015 முதல் தற்போது வரையிலான காலத்துக்குள் ஆற்றிய வீர சேவையைத் தெளிவுபடுத்தி, நாளிதழ்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகள் போன்ற சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். தைரியமான, மனிதாபிமானம் மிக்க பணிகளைச் செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்கள் விருது பெறத் தகுதியுடையவர்.
 விபத்துக்கள், ஆபத்துக் காலங்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்களைக் காத்த, சமுதாயத்திலுள்ள அனைத்து வகையான பொதுமக்கள், இளைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
 ஆயுதப் படைப் பிரிவைச் சேர்ந்தோர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தங்களது பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெறத் தகுதியானவர்களை பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு உயர் விருதுக்குழு பரிந்துரைக்கும். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
 மேலும் விவரங்களுக்கு கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரை 04142-220590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com