வெள்ளைக் களிமண்ணுக்கு தட்டுப்பாடு: செராமிக் தொழில் பாதிப்பு

வெள்ளைக் களிமண் கிடைக்காததால் செராமிக் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

வெள்ளைக் களிமண் கிடைக்காததால் செராமிக் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
 விருத்தாசலம் பகுதியில் செயல்பட்டு வரும் செராமிக் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அண்மையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: விருத்தாசலம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக செராமிக் தொழில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு விருத்தாசலம் பகுதிக்கு ரூ.896.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக பண்டாரக்குப்பம் கிராமத்தில் 465 சென்ட் இடம் கன்சோர்ட்டியத்துக்காக வாங்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசின் அனுமதியும் பெற்றுள்ளோம்.
 இந்த நிலையில் செராமிக் தொழிலுக்குத் தேவையான வெள்ளைக் களிமண்ணுக்கு 2 ஆண்டுகளாக தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில் தொழிற்சாலைகளுக்கு வெள்ளைக் களிமண் வழங்கி வந்த சுரங்கங்கள் அனைத்தும் தமிழக அரசின் அனுமதிக்காக 2 ஆண்டுகளாக காத்திருப்பதால் வெள்ளை களிமண் கிடைக்கவில்லை. இதனால் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏற்கெனவே பெற்ற ஆர்டர்களுக்கு பொருள்கள் வழங்க முடியாத நிலை உள்ளது.
 மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க இயலவில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், இத்தொழிலை நம்பியுள்ள லாரி, லேத் பட்டறை உள்ளிட்ட சிறு தொழில்களும் முடங்கியுள்ளன. எனவே, வெள்ளைக் களிமண் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அதேபோல பீங்கான், ரிப்ராக்டரி உற்பத்திக்குத் தேவையான மண்ணெண்ணெய் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையும் சரிசெய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com