காவல் துறையினர் சோதனை: 196 பேர் கைது

கடலூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய திடீர் சோதனையில் 196 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய திடீர் சோதனையில் 196 பேர் கைது செய்யப்பட்டனர்.
 கடலூர் மாவட்டத்தில் 7 காவல் துறை சரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சரகங்களுக்கு உள்பட்ட சுமார் 47 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவில் தீவிர வாகன தணிக்கை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்படி அனைத்து காவல் நிலையங்களில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
 இதில் மது கடத்தல் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 93 பேர் கைது செய்யப்பட்டனர்.
 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர்களென கணிக்கப்பட்ட 87 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதேபோல, பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை வழங்கப்பட்டு தலைமறைவாக இருந்த 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 அதேபோல மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 984 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 75 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 மோட்டார் வாகன வழக்குகள் தொடர்பாக சுமார் ரூ.3 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
 இந்த திடீர் சோதனையை அந்தந்தப் பகுதிகளின் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சோதனை திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com