நியாய விலைக் கடைப் பணியாளர்கள் ஜூலை 1-இல் ஆர்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்களை வழங்கக் கோரி, ஜூலை 1, 3-ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்களை வழங்கக் கோரி, ஜூலை 1, 3-ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
 இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.ஆர்.தங்கராசு வரவேற்றார். நிர்வாகிகள் கே.நடராஜன், வி.முத்துபாபு, பி.பாஸ்கர், எஸ்.செல்லதுரை, பி.ராதேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநில துணைத் தலைவர் துரை.சேகர் கருத்துரையும், மாநில பொதுச் செயலர் ஜி.ஜெயசந்திரராஜா சிறப்புரையும் ஆற்றினர். மாவட்ட பொருளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார்.
 கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்கள் அனைத்தும் சரியான எடையிலும், தரமானதாகவும் வழங்கக் கோரி அனைத்து வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் கிடங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 1-ஆம் தேதி திட்டக்குடி, விருத்தாசலம் நுகர்பொருள் கிடங்குகள் முன்பும், 3-ஆம் தேதி சிதம்பரம், கடலூர் நுகர்பொருள் கிடங்குகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
 மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோருவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் பதிவாளரின் சுற்றறிக்கைப்படி ஏடிஎம் மூலம் ஊதியம், மாத பிடித்தம் செய்யும் இ.பி.எஃப். பணத்தை அவரவரது கணக்குகளில் செலுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய குழு அமைத்து சீரான ஊதியம் வழங்க வேண்டும், தகுதிவாய்ந்த எடையாளருக்கு விற்பனையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com