என்எல்சி.யில் சர்வதேச யோகா தினம்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், சர்வதேச யோகா தினம் புதன்கி ழமை கடைப்பிடிக்கப்பட்டது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், சர்வதேச யோகா தினம் புதன்கி ழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 நெய்வேலி, பாரதி விளை யாட்டு அரங்கில் நடை பெற்ற நிகழ்ச்சியில், நெய்வேலி பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று பல்வேறு யோகாசனப் பயிற்சிகளைச் செய்தனர்.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் ராக்கேஷ்குமார், சுபீர்தாஸ், செல்வகுமார், ஆர்.விக்கரமன் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர்.
 நெய்வேலி மகளிர் மன்றம், சிநேகா வாய்ப்பு சேவை மையத் தலைவி யோகமாயா ஆச்சார்யா, புரவலர்கள் கஞ்சன் ராக்கேஷ்குமார், சுதேஷ்னா தாஸ், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் யோகா பயிற்சிகளைச் செய்தனர்.
 விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட ராக்கேஷ்குமார் பேசுகையில், யோகா பயிற்சி உடலையும், உள்ளத்தையும் பேணிக்காக்க உதவுகிறது என்றார்.
 என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன் வரவேற்றுப் பேசினார்.
 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இரு வாரங்களுக்கு யோகா பயிற்சிகளை நடத்த என்எல்சி இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
 இதேபோல, என்எல்சி இந்தியாவின் மண்டல அலுவலகங்களிலும், துணை நிறுவனங்களான என்டிபிஎல், என்யுபிபிஎல், ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்சிங்சரிலும் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com