மலட்டாறை தூர்வார பண்ருட்டி எம்எல்ஏ கோரிக்கை

விவசாயிகளின் நீர் ஆதாரமான மலட்டாறை தூர்வார வேண்டும் என பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

விவசாயிகளின் நீர் ஆதாரமான மலட்டாறை தூர்வார வேண்டும் என பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் சட்டப் பேரவையில் பேசியதாவது:
பண்ருட்டி நகரில் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியும், விடுதியுடன் கூடிய கலை அறிவியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் அமைக்க வேண்டும். மலட்டாறை தூர்வார வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் எனதிரிமங்கலம் அருகே தடுப்பணை அமைக்க வேண்டும். அவியனூர், பைத்தாம்பாடி, மேல்குமாரமங்கலம் ஏரிகளையும், நீர்வரத்துக் கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.
தொகுதியில் கொய்யாப் பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை, மரவள்ளிக்கிழங்கு ஆலைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பண்ருட்டி நகரம் மற்றும் தாலுகாவுக்கு தனி காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும். பண்ருட்டி -  கடலூர் வழித்தடத்தில் மகளிர் பேருந்து சேவை ஏற்படுத்தித் தரவேண்டும்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நடமாடும் நுண்கதிர் கருவி வழங்க வேண்டும். உள்நோயாளிகள் பிரிவுக்கு 30 படுக்கைகள், குழந்தைகள் பிரிவுக்கு 10 படுக்கைகள் வழங்க வேண்டும். தாய்- சேய் நல மேம்பாட்டு சிகிச்சைக்காக 40 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் தேவை. வீரப்பெருமாநல்லூர், ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும்.
நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி கரும்பு ஆலையால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டை தடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com