35 அரசுப் பள்ளிகள் உள்பட 104 பள்ளிகள் 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 35 அரசுப் பள்ளிகள் உள்பட 104 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்தன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 35 அரசுப் பள்ளிகள் உள்பட 104 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்தன.
கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மொத்தம் 410 பள்ளிகள் பங்கேற்றன. இதில் 104 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை அளித்தன. இதில் 35 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.
கடலூர் கல்வி மாவட்டத்தைப் பொறுத்தவரை 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 74 பள்ளிகளில் 21 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இதில் 14 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.
கடலூர் கல்வி மாவட்டத்தில் ராசாப்பேட்டை, கட்டியாக்குப்பம், வடலூர் புதுநகர், கே.நெல்லிக்குப்பம், சாத்தப்பாடி, புலியூர்காட்டுசாகை, ஆபத்தாணபுரம், சாக்கன்குடி, சந்தைவெளிப்பேட்டை, நாகம்மாபேட்டை, எஸ்.புதூர், கருக்கை, கீழ்மாம்பட்டு, தாழம்பட்டு, முடசலோடை, சிவபுரி, கீழக்குப்பம், இந்திராநகர், புதுப்பாளையம், மேலிருப்பு, கீழக்குமாரமங்கலம் அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தன.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் எம்.புடையூர் மாதிரிப் பள்ளி, கொரக்கை, மூவூர், மணியமதூர், நல்லூர், பெரியகாப்பான்குளம், புலியூர், பெரியநெசலூர், வண்ணான்குடிகாடு, புடையூர், ஏ.சித்தூர், வெல்லூர், குறுங்குடி, ஊ.மங்கலம் அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com