அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு

அண்ணாகிராமம் வட்டார விவசாயிகள் பாரத பிரதமரின் க்ரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன

அண்ணாகிராமம் வட்டார விவசாயிகள் பாரத பிரதமரின் க்ரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன வசதி  அமைத்து பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நுண்ணீர்ப் பாசனம் என்பது ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்ப முறையாகும். இதன் மூலம் நீரில் கரையும் உரங்களை பாசன நீர் வழியாக பயிரின் வேர்ப் பகுதிக்கு நேரடியாகச் செலுத்த முடியும்.
 பாரத பிரதமரின் க்ரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், அண்ணாகிராமம் வட்டாரத்துக்கு நடப்பு நிதியாண்டில் 375 ஹெக்டேர் கரும்பில் சொட்டு நீர்ப் பாசன வசதி அமைக்கவும், 200 ஹெக்டேர் பயறுவகை, எண்ணெய் வித்துப் பயிர்களில் தெளிப்பு நீர் பாசன வசதி அமைக்கவும் இலக்கு பெறப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் 100 சதவீத மானியமும், இதர விவசாயிகள் 75 சதவீதம் மானியமும் பெறலாம். இதற்கு விவசாயி புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், கிணறு ஆவணம், நீர் மற்றும் மண் பரிசோதனை முடிவு அட்டை, சிறு மற்றும் குறு விவசாயியாக இருப்பின் வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சான்றிதழ், குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம், சொந்த கிணறு இல்லையெனில் தண்ணீர் வழங் கும் உரிமையாளரிடமிருந்து தண்ணீர் பயன்படுத்த சம்மதக் கடிதம் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, ஒவ்வொரு ஆவணமும் 400 கே.பி. அளவில் உள்ளவாறு, விவசாயிகள் தாங்களாகவோ, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாகவோ, தெரிவு செய்யப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனம் மூலமாகவோ t‌n‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்புக்கு பதிவேற்றம் செய்யலாம்.
 மேற்கூறிய அனைத்து ஆவணங்களையும் சரியான முறையில் பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, விவசாயிகளால் தெரிவு செய்யப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நுண்ணீர் பாசனக் கருவி வசதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் சிரமத்தைப் போக்கவும், நீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டும், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து பயனடையுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com