நீர் நிலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர், திட்டக்குடி, சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர், திட்டக்குடி, சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், அனைத்து நீர் நிலைகள், ஏரிகள், குளங்களையும் தூர்வாரி வாய்க்கால்களை சீரமைத்தல், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்,
திட்டக்குடி வட்டம் முழுவதும் குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மே 15-ஆம் தேதி நடத்தப்பட்டது.
 அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். நிர்வாகிகள் கோ.மாதவன், மு.மருதவாணன், வி.சுப்புராயன், பி.கருப்பையன், ஜெ.ராஜேஷ்கண்ணன், ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திட்டக்குடி: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சிதம்பரம், கிளைச் செயலர்கள் ராமமூர்த்தி, ராஜவேல், பாண்டுரெங்கன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சியில் குடிநீர்ப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற நீர் வழங்குவது, புதை சாக்கடை திட்ட முறைகேட்டை கண்டிப்பது எனபன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, கே.சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், அரசு ஊழியர் சங்க நிர்வாகி கலியமூர்த்தி, சங்கமேஸ்வரன், சின்னையன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.நடராஜன், நகர்க்குழு உறுப்பினர் ஜின்னா, ஜோசப், செந்தில், அஷ்ரப்அலி, மாதர் சங்கம் சித்ரா, அமுதா, மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
அலுவலகத்தில் கோட்டாட்சியர் இல்லாததால் கட்சியினர்  ஊர்வலமாகச் சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆணையர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார். பின்னர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கே.ஜெகதீசன், நகர காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்ததை அடுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com