கோழிப்பண்ணை அமைக்க அரசு மானியம்

கோழிப்பண்ணை அமைத்திட அரசு வழங்கும் மானியத்தை தொழில்முனைவோர் பயன்படுத்த வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோழிப்பண்ணை அமைத்திட அரசு வழங்கும் மானியத்தை தொழில்முனைவோர் பயன்படுத்த வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 இதுகுறித்து ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோழி அபிவிருத்தித் திட்டத்தை நிகழாண்டில் ரூ.25 கோடியில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்துக்கு 30 கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டத்தில் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
 பயனாளிகள் தங்களது சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று கோழிப்பண்ணை அமைக்கலாம். கறிக்கோழிப்பண்ணை அமைப்பதற்கான கோழிக் கொட்டகை கட்டும் பணி மற்றும் உபகரணங்கள் வாங்க ஆகும் மொத்த செலவில் 25 சதவீதம் முன் மானியமாக தமிழக அரசு வழங்குகிறது.
 தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கறிக்கோழிப்பண்ணை ஒருங்கிணைப்பாளரின் கடிதம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கானச் சான்றுடன் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை அல்லது துணை இயக்குநர் (நிர்வாகம்), கால்நடை பராமரிப்புத் துறை ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com