சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திட்டக்குடி வைத்திய நாதசுவாமி மற்றும் பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திட்டக்குடி வைத்திய நாதசுவாமி மற்றும் பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதனை முன்னிட்டு திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட ஆயுள் வேண்டி பாலாலும், மோட்சம் வேண்டி நெய்யாலும், நல்ல வாரிசு வேண்டி தயிராலும், பொருளாதார முன்னேற்றம் வேண்டி பஞ்சாமிர்தத்தாலும் நந்திபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும், பல்வேறு வாசனைத் திரவியங்களாலும் நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மேலும் 500க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
 தண்டபாணி குருக்கள், திருஞானசம்பந்தம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வைத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
 இதேபோன்று, திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், பெண்ணாடம் பிரளகாளேஸ்வரர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. நந்திதேவர் வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com