9 வட்டங்களில் வருவாய்த் தீர்வாயம் தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது.
 கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வருவாய்த் தீர்வாயத்தை தொடக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
 மேலும், புவனகிரி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியர், விருத்தாச்சலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திட்டக்குடி வட்டத்தில் கடலூர் தனித் துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மனுக்களை பெற்றனர். இந்த முகாமானது அதிகபட்சமாக வரும் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 கடலூர் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாமாற்றம் கோரி 81 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 26 மனுக்களும், குடும்ப அட்டை, சான்றிதழ் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக 41 மனுக்கள் என மொத்தம் 148 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 5 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், 2 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தொகைக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம்.டி.கிருபாகரன், உதவி இயக்குநர் (நிலஅளவை) எஸ்.ரவி, கடலூர் வருவாய் வட்டாட்சியர் ப.பாலமுருகன், வட்டாட்சியர் (ச.பா.தி) எஸ்.சிவா, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் பி.தேவனாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், கால்நடை உதவி மருத்துவர் பார்கவி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 கடலூர் வட்டத்தில் வெள்ளிக்கிழமை ராமாபுரம், கெங்கமநாயக்கன் குப்பம், அன்னவல்லி, சென்னப்பநாயக்கண்பாளையம், அரிசிபெரியாங்குப்பம், வெட்டுக்குளம், மாவடிப்பாளையம், குமாரப்பபேட்டை, வெள்ளக்கரை ஆகிய கிராமங்களுக்கான வருவாய்த் தீர்வாயம் நடைபெறுகிறது.
 பண்ருட்டி: பண்ருட்டியில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்துக்கு, மாவட்ட சார்-ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜய்ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜவேல், ஜமாபந்தி மேலாளர் ஜெயக்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வி.செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முகாமில் நெல்லிக்குப்பம் குறுவட்டத்துக்கு உள்பட்ட கொங்கராயனூர், சன்னியாசிப்பேட்டை, மேல்கவரப்பட்டு, பாலூர், சித்தரசூர், மேல்பாதி, கீழ்பாதி, சாத்திப்பட்டு, பலாபட்டு, சிறுநங்கைவாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 229 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 29 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. 68 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேல் நடவடிக்கைக்காக 132 மனுக்கள் ஏற்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேல்பட்டாம்பாக்கம், பெருமாள்நாயக்கன் பாளையம், பல்லவராயநத்தம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, கீழ்அருங்குணம், கோழிப்பாக்கம், பகண்டை உள்ளிட்ட கிராமத்தினருக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.
 குறிஞ்சிப்பாடி: இதேபோல குறிஞ்சிப்பாடியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. வட்டாட்சியர் ஜான்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 237 மனுக்கள் வரப்பெற்றன.
 சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் வியாழக்கிழமை தொடங்கியது. வருகிற ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 முகாமில், மாவட்ட தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வட்டாட்சியர் மகேஷ் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் 12 கிராமங்களைச் சேர்ந்த 76 பேர் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்டவை குறித்து மனுக்களை அளித்தனர்.
 நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத் துறை) அரங்கநாதன், தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, மண்டல துணை வட்டாட்சியர் செல்வக்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com