மலட்டாறை தூர்வார நடவடிக்கை: பண்ருட்டி எம்எல்ஏ உறுதி

மலட்டாறை தூர்வார முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம்.

மலட்டாறை தூர்வார முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து மலட்டாறு தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 கி.மீ. தொலைவு, கடலூர் மாவட்டத்தில் 10 கி.மீ. தொலைவு என மொத்தம் சுமார் 40 கி.மீ. தொலைவு பாயும் இந்த ஆற்றின் மூலம்,  சுமார் 5,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 1972-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மலட்டாறு மண்மேடானது.
மலட்டாறை புனரமைக்க  வேண்டும் என முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், மலட்டாறு, நடுமலட்டாறில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அரசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் நடுமலட்டாறில் ஒரு படுகை அணையும், ரெட்டி வாய்க்கால் இணையும் காரப்பட்டு கிராம எல்லையில் ஒரு படுகை அணையும் புதிதாக அமைக்கவும்,  மலட்டாற்றின் மொத்த நீளமான 40 கி.மீ. தொலைவுக்கு முழுமையாக தூர்வாரி சீரமைத்து, தேவையான இடங்களில் பாசன மதகுகள், தடுப்புச் சுவர் அமைத்திடவும் ரூ.23 கோடிக்கு உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நிதி ஒதுக்கீடு பெற, சென்னை மண்டல (பொ.ப.து) தலைமைப் பொறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், ரெட்டிக்குப்பம் மலட்டாறு பகுதியை விவசாயிகள், கிராம மக்களுடன் அண்மையில் பார்வையிட்டார்.  அப்போது அவர் கூறுகையில், மலட்டாறை தூர்வார முதல்வரிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கபிலன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, ராமதாஸ் ஆகியோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com