ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில், ஏஐசிடியூ சார்பில் கல்லூரி ஆசிரியர்களுக்கான இரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில், ஏஐசிடியூ சார்பில் கல்லூரி ஆசிரியர்களுக்கான இரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
 "கழிவு நீர் சுத்திகரிப்பு, பயன்பாடு மற்றும் காற்று மாசடைதலை கட்டுப்படுத்தும் நுட்பங்கள்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பை, பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஆசிரியர்களுக்கான இந்தப் பயிற்சி, தற்கால கட்டாயத் தேவைகளுள் ஒன்று. பசுமை இந்தியா என்ற அரசின் திட்டத்துக்கு ஆசிரியர்களின் ஆர்வக் குரல் ஒலிக்கிறது என்றார் அவர்.
 பொறியியல் புல முதல்வர் சி.ஆண்டனி ஜெயசேகர் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தப் பயிற்சி, தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்னேற்றப் பாதையாக அமைந்து, பலரும் இதில் பயணிக்கும் வகையில் வளர வேண்டும். இதில் ஆய்வுகளும் தொடர வேண்டும். நமது பல்கலைக்கழகம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார். வேதிப் பொறியியல் துறைத் தலைவர் வி.விஜயகோபால் வாழ்த்துரை ஆற்றினார்.   பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளராக வேதிப் பொறியியல் துறை எம்.ராஜசிம்மன், இணை ஒருங்கிணைப்பாளர்களாக பி.கோபாலகிருஷ்ணன், முனைவர்கள் வி.சரவணன், பி.சரவணன் ஆகியோர் செயல்பட்டனர்.
 முகாமில், பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com