மணல் கடத்தல்: 148 வாகனங்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 148 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று எஸ்.பி. தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 148 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று எஸ்.பி. தெரிவித்தார்.
 கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் கடந்த 16-ஆம் தேதி 4 தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டார்.
 மாவட்டத்திலுள்ள 7 உள்கோட்டங்களிலும் இயங்கும் வகையில் 4 காவல் ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், தலா 10 காவலர்கள் இப்படையில் இடம் பெற்றனர். இவர்கள் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.
 இதன்படி மாவட்டத்தில் இதுவரை 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனுமதியின்றி நீர்நிலைகளில் மணல் அள்ளியதாக 11 லாரிகள், 4 டிராக்டர், மினிலாரி 3, மணல் அள்ளும் இயந்திரம் 1 மற்றும் 129 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 இதனால், தற்போது மாவட்டத்தில் மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. எனினும், தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com