மரக்கன்று நடும் விழா

கடலூர் முதுநகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூர் முதுநகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
 கடலூர் மாவட்டத்தில் மரக் கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் பசுமை கடலூர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மற்றும் அனைத்து நுகர்வோர்கள் இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, கடலூர் துறைமுக நண்பர்கள் குழு சார்பில் கடலூர்முதுநகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவைத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். கடலூர் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசினார். மேலும், மாணவிகள் தங்களது வீடுகள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதோடு, தங்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடமும் மரக்கன்றுகள் நடுவதன் பயன்களை எடுத்துக் கூறி ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
 மாவட்டக் கல்வி அலுவலர்ரா.விஜயா, என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.திருமுகம், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், ஓய்வுபெற்ற வன அலுவலர் ஜி.சாய்ராம், சுற்றுச்சூழல் ஆர்வலர் தி.அருள்செல்வம், கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி உள்ளிட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். கடலூர்துறைமுக நண்பர்கள் குழு ஆலோசகர் ஏ.வைத்தியநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com