வடலூரில் சன்மார்க்க மாநாடு தொடக்கம்

வள்ளலாரின் அவதார (வருவிக்கவுற்ற) நாள் விழா, உலக ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி, கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சன்மார்க்க மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

வள்ளலாரின் அவதார (வருவிக்கவுற்ற) நாள் விழா, உலக ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி, கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சன்மார்க்க மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.
 காலையில் சத்திய தரும சாலையில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பா வழிபாட்டுடன் மாநாட்டு அரங்கை அடைந்தனர்.
 பிரம்மரிஷி மலை மாதாஜி ரோகிணி ராஜகுமார், சரஸ்வதி ராஜேந்திரன், சிங்கப்பூர் ஷெரீன் ரத்தினவேல் ஆகியோர் ஞான தீபம் ஏற்றினர்.
 முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இஞ்சிமேடு சித்தர் ஐ.ஆர்.பெருமாள், முன்னாள் எம்எல்ஏ ஆ.தங்கராசு, வி.எம்.சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினார். ரா.ராதாகிருஷ்ணன், எம்.கே.பார்த்திபன், பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜகுமார் குருஜி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
 நிகழ்ச்சியில் திருவருட்பா ஐந்து, ஆறாம் திருமுறை (திருத்திய செம்பதிப்பு கன்னடம்), திருவருள்பா அகராதி, ராமலிங்கர் தத்துவம் ஓர் அறிமுகம் (ஆங்கிலம்) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
 என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் ஆர்.விக்ரமன், கடலூர் மாவட்ட எஸ்.பி. செ.விஜயகுமார், ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தொடர்ந்து, வள்ளலாரின் வரலாறு தொடர்பான வில்லிசை நிகழ்ச்சி, திருவருட்பா திருவுரை, விரிவுரை, சேர்ந்திசை நிகழ்ச்சி, மாணவிகளின் சொல்லரங்கம் ஆகியவை நடைபெற்றன. முன்னதாக, ஓய்வுபெற்ற ஆசிரியர் வெ.ராமானுஜம் வரவேற்றார்.
 விழாவில், சன்மார்க்க அன்பர்கள், ஆன்மிகப் பெரியோர் திரளானோர் கலந்துகொண்டனர். மாநாடு வெள்ளிக்கிழமை (அக்.6) நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com