அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து பூமா கோயில் எதிரே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து பூமா கோயில் எதிரே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், மாதந்தோறும் ஊதியத்தைக் கடைசி வேலைநாளன்று வழங்க வேண்டும். ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும். பணிநிரவலைக் குறித்த காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்திரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 10-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 11-ஆம் தேதி பூமா கோயில் எதிரே கருப்பு வில்லை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தலைமை வகித்துப் பேசியதாவது: பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். அக்டோபர் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) கோரிக்கைகளை வலியுறுத்தி, பூமா கோயில் வளாகத்தில் கண்டனக் கூட்டம் நடைபெறும். அப்போது, ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வேந்தருக்கு (ஆளுநர்) கோரிக்கைகளை வலியுறுத்தி, தனித் தனியாக கடிதம் எழுத உள்ளனர் என்றார்.
 போராட்டத்தில் ஆசிரியர்கள் சங்கங்களின் தலைவர்கள் உதயசந்திரன், சிவகுருநாதன், பக்கிரிசாமி, பூங்கோதை, இமயவரம்பன், பாஸ்கர், சுப்பிரமணியன், ஜெயலஷ்மி, தனசேகர், முத்துவேலாயுதம், செல்வராஜ், செல்வகுமார், ஜெய்சங்கர், வேல்ராஜ், புருஷோத்தமன், தன்ராஜ் , காமராஜ், செங்கல்வராயன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com