நேரு இளையோர் மையம் சார்பில் மாதிரிக் கிராம நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம், அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில், நெல்லிக்குப்பம் அருகே உள்ள

கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம், அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில், நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு ஊராட்சி, விஸ்வநாதபுரம் மாதிரிக் கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டது. அங்கு இளைஞர் மன்றத்தினரால் ஒரு மாத காலம் இளைஞர் மேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள், தன்னம்பிக்கைப் பயிலரங்குகள் நடைபெற்றன.
 அங்குள்ள அரசுப் பள்ளி, கோயில்களில் தூய்மைப் பணிகள், வேலைவாய்ப்பு முகாம், யோகா பயிற்சிகள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சிகள், குறும்படப் போட்டி, மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி, மருத்துவ முகாம், ரத்த தானம் முகாம் ஆகியவை நடைபெற்றன.
 இதன் நிறைவு விழா விஸ்வநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கடலூர் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன் ராணி தலைமை வகித்தார். மனித உரிமைகள் கழகத்தின் செயல் இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சமூக ஆர்வலர் ஜாபர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட சார்பு நீதிமன்றச் செயலர் நீதிபதி என்.சுந்தரம், கடலூர் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் மா.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
 அப்போது அவர் பேசியதாவது: கிராமப்புறத்திலுள்ள மாணவர்கள், இளைஞர்கள் உலக நடப்புகள், அரசின் பல்வேறு திட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் செய்தித் தாள்களைப் படிக்க வேண்டும். மேலும், நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசித்து உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். வள்ளலார் மன்றத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் விஸ்வநாதபுரம் இளைஞர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com