விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 அப்போது அவர், குழந்தைகள் உள் நோயாளி பிரிவு, பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவு, குடும்ப நலப்பிரிவு ஆகிய பிரிவுகளில் உள்ள நோயாளிகளிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதாக என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
 உரிய படுக்கை வசதிகள் இருக்கின்றனவா என்றும், கூடுதலாக படுக்கை வசதி தேவை என்றால் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போதுமான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனறும் மருத்துவருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 மருத்துவமனை சுற்றுப்புறத்தில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் உபயோகமற்ற பொருள்கள் கிடந்தால் அவற்றை உடடினயாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
 ஆய்வின்போது விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர் பன்னீர்செல்வம், அரசு மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com