அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்தப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் வழங்காததைக் கண்டிப்பது, மாதந்தோறும் கடைசி வேலைநாளன்று ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ஆம் தேதி முதல் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த நிலையில், புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வியாழக்கிழமை பூமா கோயில் வளாகத்தில் தொடர்ந்து 2-ஆவது நாளாக கருப்புப் பட்டை அணிந்து கருப்பு தினமாகக் கடைப்பிடித்தனர்.
 பல்கலைக்கழகத்தின் நிதிச் சிக்கலைத் தீர்த்து தங்களது வாழ்வுரிமையைக் காக்குமாறு தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 5,000 பேர் கடிதம் அனுப்பினர். வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து கண்டன கூட்டம் நடைபெறும் என கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.
 போராட்டத்தில், சங்க நிர்வாகிகள் உதயசந்திரன், சுப்பிரமணியன், பக்கிரிசாமி, பூங்கோதை, இமயவரம்பன், பாஸ்கர், தனசேகர், முத்துவேலாயுதம், செல்வராஜ், சிங்காரசுப்பிரமணியன், செல்வகுமார், வேல்ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com