மின் நுகர்வோர் பாதுகாப்பு பிரசாரம்

மின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பண்ருட்டி கோட்டம் சார்பில் வியாழக்கிழமை பிரசாரம் (படம்) மேற்கொள்ளப்பட்டது.

மின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பண்ருட்டி கோட்டம் சார்பில் வியாழக்கிழமை பிரசாரம் (படம்) மேற்கொள்ளப்பட்டது.
 பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரச்சாரத்துக்கு செயற்பொறியாளர் எல்.லீலா தலைமை வகித்துப் பேசினார். உதவி செயற்பொறியாளர் வள்ளி, உதவி மின் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 பிரச்சாரத்தில் மின் வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை உள்ள மின் சாதனங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். பழுதான வீட்டு மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். மின் கம்பத்தில் கயிறு கட்டி துணியை உலர்த்தக் கூடாது. மழைக் காலத்தில் மின்மாற்றி, மின் கம்பம் அருகே செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினர்.
 பின்னர், பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் நுகர்வோர் மற்றும் சுற்றுப்புற மின் பாதுகாப்பு குறித்து துண்டுப் பிரசுரங்களை செயற்பொறியாளர் எல்.லீலா விநியோகித்தார். உதவி மின் பொறியாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com