டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணி ஆய்வு

கடலூரில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஞாயிற்றுக்கிழமை  ஆய்வு செய்தார்.

கடலூரில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஞாயிற்றுக்கிழமை  ஆய்வு செய்தார்.
 கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமென ஆட்சியர் வலியுறுத்தி வருகிறார். மேலும், இந்தப் பணியில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தினமும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வீடு, வீடாக ஆய்வு நடத்தி கொசுப்புழு உற்பத்தியாகக் கூடிய பொருள்களை அப்புறப்படுத்துவதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
 அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் கடலூர் முதுநர் மோகன்சிங் தெருவில் உள்ள வீடுகளில் உபயோகமற்ற பொருளான தேங்காய் மட்டைகளை கண்டறிந்து உடனடியாக அப்புறப்படுத்த வீட்டின் உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். மேலும்,  அப்பகுதியில் இருந்த விநாயகர் கோயிலில் உபயோகமற்ற பொருள்களில் தேங்கியிருந்த நீரில் கொசுக்கள் இருப்பததை கண்டறிந்து அவற்றினை உடனடியாக அப்புறப்படுத்த அர்ச்சகருக்கு அறிவுறுத்தினார்.
 பின்னர், அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலினை தூர்வாரி தங்கு தடையின்றி கழிவு நீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்தவேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், ஆய்வாளர்கள் தாமோதரன், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com