அண்ணா பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 அதிமுக சார்பில் நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர்
 கோ.ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் அன்பரசன், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சி.மாசிலாமணி, தொழிற்சங்கப் பிரிவு பாலகிருஷ்ணன், விவசாயப் பிரிவு காசிநாதன், ஒன்றியச் செயலர்கள் ஜெ.முத்துகுமாரசாமி, ராம.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 டிடிவி தினகரன் ஆதரவு அதிமுகவினர் நகரச் செயலர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 திமுகவினர் நகரச் செயலர் கே.எஸ்.ராஜா முன்னிலையில் ஊர்வலமாகச் சென்று, தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.
 மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.ஜி.ராஜேந்திரன், மாணவரணி அமைப்பாளர் நடராஜன், பேச்சாளர் கு.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திட்டக்குடி: திட்டக்குடியில் அதிமுக நகரச் செயலர் ஆர்.நீதிமன்னன் தலைமையில் அந்தக் கட்சியினர் வதிஷ்டபுரத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 மங்களூர் ஒன்றியச் செயலர் கே.பி.கந்தசாமி, நல்லூர் ஒன்றியச் செயலர் ராஜேந்திரன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முல்லைநாதன், நிர்வாகி ஆர்.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திமுக சார்பில் அண்ணா சிலைக்கு நகரச் செயலர் பரமகுரு தலைமையில், ஒன்றியச் செயலர் பட்டூர் அமிர்தலிங்கம் மாலை அணிவித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், அன்பானந்தம், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 சிதம்பரம்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்டச் செயலர் ஆ.அருண்மொழிதேவன் எம்பி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் அமைச்சர் செல்வி.ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலர் ரா.செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலர் டேங்க் ஆர்.சண்முகம், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லைகோபி, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர், மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்டப் பிரதிநிதி கே.நாகராஜன், ஒன்றியச் செயலர்கள் வி.ஆர்.ஜெயபாலன், அசோகன், மருதை முனுசாமி, நகர நிர்வாகிகள் எம்.யேசுராஜ். பன்னீர்செல்வம், கருப்பு ராஜா, தொழில்நுட்பப் பிரிவு ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பண்ருட்டி: பண்ருட்டியில் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமையில், முன்னாள் நகர் மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவினர் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாகச் சென்று, நான்கு முனைச் சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், பண்ருட்டி ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், அவைத் தலைவர் ராஜதுரை, நகரச் செயலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தொடர்ந்து, நகர அம்மா பேரவைச் செயலர் ஆர்.செல்வம் தலைமையில், முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், நகர துணைச் செயலர் பி.மாணிக்கம், இணைச் செயலர் சத்தியா கலைமணி, மாவட்டப் பிரதிநிதி எஸ்.கே.விஜயன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 கடலூர் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் கே.நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில், நகரச் செயலர் கே.ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவினர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து நான்கு முனைச் சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 மாவட்ட துணைச் செயலர் தணிகைச்செல்வன், தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், வழக்குரைஞரணி அமைப்பாளர் பி.பக்கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நெய்வேலி: நெய்வேலியில் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு, தொழிற்சங்கச் செயலர் ராம.உதயகுமார் தலைமையில், சங்கத் தலைவர் அபு, பொருளாளர் தேவானந்தன், அலுவலகச் செயலர் அல்போன்ஸ், நகரச் செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
 குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக ஒன்றியச் செயலர் வடக்குத்து ரா.கோவிந்தராஜ் தலைமை வகித்து மாலை அணிவித்தார். நகரச் செயலர் அனந்தபாஸ்கர், ஒன்றிய அவைத் தலைவர் டி.பி.கண்ணப்பன், துணைச் செயலர் சிவராமலிங்கம், வடலூர் நகரச் செயலர் சி.எஸ்.பாபு, ஒன்றியப் பொருளாளர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com